காதல் விவகாரம் : 15 ஆவது மாடியில் இருந்து குதித்த இளைஞர்

கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் 15ஆம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நபர் மலேசியாவின் முன்னாள் தூதுவர் இப்ராஹிம் அன்சாரின் புதல்வர் என்று தெரிய வந்துள்ளது.

மலேசியாவுக்கான முன்னாள் தூதுவர் இப்ராஹிம் அன்சாரின் புதல்வர் முஹம்மத் முனீஸ் என்பவர் யூனியன் பிளேஸ் இல் உள்ள தனியார் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் 24 வயதான குறித்த இளைஞர் இன்று மத்தியானம் கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்ற போதும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கொலையாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் முன்னாள் தூதுவர் இப்ராஹிம் அன்சார் குடும்பம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like