தெற்காசியாவில் ஆறாவது இடத்தை பிடித்த இலங்கை

2017ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வேகம் நூற்றுக்கு 4.7 வீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசிய எல்லை தொடர்பில் உலக வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கைக்கமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த மதிப்பீட்டிற்கமைய மாலைத்தீவு (4.5%) மற்றும் ஆப்கானிஸ்தான் (2.4%) ஆகிய நாடுகளை விட இலங்கை முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அறிக்கையின்படி அதிக பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் நாடாக இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தியா 7.2 பொருளாதார வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இங்கு பங்களாதேஷ் மற்றும் பூட்டான் நூற்றுக்கு 6.8 வீத வளர்ச்சியையும் நேபாளம் நூற்றுக்கு 6 வீத வளர்ச்சி வேகத்தை எதிர்பார்க்கின்ற நிலையில் பாகிஸ்தான் 5.2 வீத மதிப்பீடாக காணப்படுகின்றது.

நிர்மாணிப்பு, சந்தை மற்றும் நிதி சேவை பிரிவுகளில் காணக்கூடிய வளர்ச்சியுடன் இந்த அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சி நிலைமையினால் இந்த வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அரசாங்கம் பிரிஸ்கல் கொள்கையை அதிகரிப்பதற்கும், நிதி கொள்கையை கடுமையாக்குவதன் ஊடாக பொருளாதாரத்திற்கு சிறப்பான நிலைமையை ஏற்படுத்துவதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

You might also like