பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் தானும் தீக்குளித்து தற்கொலை!

காலியில் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் காலி – அக்மீமன பகுதியில் நேற்று முன்தினம் 17ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த இருவரும் கணவன், மனைவி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பின்னதுவ – தர்மராம மாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஆணொருவரே தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

மேலும், பின்னதுவ – புகுல்ஹேன பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவரே கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் வெளிவராத நிலையில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like