தந்தைக்கு உதவிசெய்த பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரம்!

கேகாலை மாவட்டத்தில் உள்ள பின்னவல பிரதேசத்தில் பெண் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் நால்வரில் ஒருவரை பின்னவல பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பின்னவல பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத குறித்த பெண் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு உதவி செய்து கொண்டு வந்துள்ளார்.

இதன்போது நான்கு பேரால் அவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 45 வயதான குறித்த பெண் பலாங்கொடை பொது வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் குறித்து பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like