பணத்திற்காக மனித கடத்தலில் ஈடுப்பட்ட இலங்கைத் தமிழர்கள்: கனடா நீதிமன்றில் குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்கள் 4 பேர் மனித கடத்தலில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு கனடா பி.சி உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பா, கமல்ராஜ் கந்தசாமி, ஜெயசந்திரன் கனகராஜா மற்றும் விக்னராஜா தேவராஜா ஆகிய நால்வர் மீது குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு 76 இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுடன் rickety என்ற சரக்கு கப்பலை கனடாவின் வான்கூவர் கடற்கரையில் குறித்த நால்வரும் விட்டுச் சென்றுள்ளனர் என்று அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணைகளின் போது குறித்த நான்கு தமிழர்களும் பணத்திற்காகவே மனித கடத்தலில் ஈடுப்பட்டதாகவும், அவர்கள் உதவுவதற்காக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை எனவும், க்ரவுன் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனினும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி Maggie Loda, பணத்திற்காக மனித கடத்தலில் ஈடுப்பாட்டார்கள் என கூறுவதற்கு தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்தார்.

இவர்கள் உதவும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக அவர் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like