பேஸ்புக்கின் இரகசியத் திட்டம்? : அனைத்து பாவனையாளர்கள் விபரமும் அமெரிக்க புலனாய்வினரிடம்!

உலகை தனிக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்க ஓர் கும்பல் திட்டம் தீட்டி வருகின்றது என்பது நம்ப முடியாத விடயம் தான்.

இருந்தாலும் கூட இதனை நம்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது உலகு. நமக்கு தெரியாத விடயங்கள் பல நம்மைச் சுற்றி அரங்கேற்றப்பட்டு கொண்டு வருகின்றது என்பதே உண்மை.

உலகை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்வதற்காக இல்லுமினேட்டி குழு இயங்கிக்கொண்டு வருகின்றது.

இந்தக் குழுவில் இருப்பவர்கள் மிகப்பெரிய புள்ளிகள் அதனால் இல்லுமினேட்டியை அழிப்பது என்பது சாத்தியமற்றது.

உலக கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என இந்த ஒற்றைக்கண் குழுவின் அங்கத்தவர்கள் அசைக்க முடியாதவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போதைய உலகில் சமூகவலைத்தளங்கள் இல்லாத இடம் எதுவும் இல்லை. அதில் பிரதான இடத்தை வகிக்கும் முகநூல் என்பதும் கூட இல்லுமினேட்டிகளின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதாகவும் கூறப்படுகின்றது.

இல்லுமினேட்டிகளுக்கும் யூதர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது இல்லுமினேட்டி ஆய்வாளர்களின் கருத்து.

அந்தவகையில் இன்று மிகப்பிரபல்யமான முகப்புத்தகம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஸ்தாபகர் மார்க் ஒரு யூதர் என்று கூறப்படுகின்றது.

அதே போல் இல்லுமினேட்டிகளது இரகசிய இலக்கம் 13. இந்த 13 அவர்கள் குழுவின் பிரதானிகளைக் குறிக்கும்.

பேஸ்புக் தளத்திற்குள் நுழையும் போது 13 உறுப்பினர்கள் காட்டப்படும் இந்த 13 இல்லுமினேட்டிகள் இலக்கம்.

அதே போன்று இது தொடர்பில் மார்க் மூலமாகவே உண்மைகள் கண்டறியப்பட்டது. ஒரு நேரடி நேர்காணலின் போது மார்க் அணிந்துள்ள மேலங்கி கழற்றப்பட்டது.

அதன் உட்புறத்தில் இல்லுமினேட்டிகள் குறித்த சின்னம் மற்றும் அவர்களது திட்டம் போன்றவை அச்சிடப்பட்டுள்ளமை அறியப்பட்டது.

இது தொடர்பில் மார்க் இடம் வினவிய போது நேரலையில் அவர் தடுமாறியதும் கூட பதியப்பட்டது.

ஓர் அங்கியில் உட்புறத்தில் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளமை ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று. இதன் மூலம் மார்க் ஒரு இல்லுமினேட்டி என்ற செய்தி வைரலாக பரவியது.

இதன் படி பேஸ்புக் மூலம் இல்லுமினேட்டி குழு உறுப்பினர்களுக்கு தகவல்கள் பரிமாறப்படுகின்றது எனவும், இந்த நிறுவனம் உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதற்கு வழி வகுக்கின்றது என்பது இல்லுமினேட்டி ஆய்வாளர்களின் கருத்து.

தொடர்ந்தும் செய்யப்பட்ட விசாரணையில் முகப்புத்தகத்தின் இணை அமைப்புகளில் ஒன்றான information awareness நிறுவனத்தில் இல்லுமினேட்டிகளின் சின்னம் உள்ளது.

இந்த பிரச்சினை காரணமாக அமெரிக்க உளவுத்துறையிடம் பேஸ்புக் நிறுவனம் தனது பாவனையாளர்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வகையில் பேஸ்புக் பாவனையாளர்கள் பற்றி அமெரிக்க உளவுத்துறையும் அறிந்து கொள்ளும். இதன் மூலமாக இல்லுமினேட்டிகளை கண்டு பிடிக்கலாம் என்பது இலக்கு.

அதே போன்று அமெரிக்கா புலனாய்வுத் துறைக்கும் இல்லுமினேட்டிகளுக்கும் தொடர்புகள் இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உலகை ஆள நினைக்கும் 13 குடும்பங்களின் இரகசிய திட்டங்களை உலகம் முழுவதும் பரப்ப இந்த முகப்புத்தகம் உதவி செய்து வருவதாக நம்பப்படுகின்றது.

இவ்வாறாக இந்த இல்லுமினேட்டி குழுவில் உலகில் பிரபல்யமான நபர்களும், செல்வந்தர்களும் உள்ளனர். அவர்களது அதிகாரம், செல்வாக்கு, பணம் போன்றவை இதுவரை இவர்கள் தப்பிக் கொண்டு இருக்க முக்கிய காரணம்.

இவர்களது இரகசியத் திட்டங்கள் யாவை, அதில் உள்ள பிரதான அங்கத்தவர்கள் யார் யார்? இல்லுமினேட்டிகள் கொலை செய்த முக்கியஸ்தர்கள் போன்றவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

You might also like