வவுனியாவில் மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில்  குப்பைமேடு சரிந்ததில் அதில் அகப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு இன்று (20.04.2017) வவுனியா மில் விதியிலுள்ள புளியடி விநாயகர் ஆலயத்தில் காலை 8.30மணியளவில் ஆத்மாசாந்தி பூஜை வழிபாடு அறங்காவலர் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹன புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராசா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ. நித்தியானந்தன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தா திரு. எஸ். ஏஸ. வாசன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் திரு. ரி.கே. இராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. சந்திரகுமார், சமூக அர்வலர்கள், பொதுமக்கள் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆத்மா சாந்திப்பிரார்த்தனையில் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி தீப அஞ்சலி செலுத்தினார்கள்.

 

You might also like