வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டுப்பகுதியில் புதிய குடியேற்றத்திற்குத் தடை

அவர்களிடம் உரையாடிய வன இலகா உத்தியோகத்தர் கே. டயிள்யூ. எஸ். எச். அமரவீர ,
35தொடக்கம் 40வரையான குடும்பங்கள் கடந்த சில வருடங்களாக வன இலகா திணைக்களத்திற்குச் சொந்தமான விக்ஸ்காட்டுப்பகுதியினை அபகரித்து வீடுகட்டி, மின்சாரம் பெற்று வசித்துவருகின்றனர்.
தற்போது அவர்களைவிட வேறு சிலர் அங்கு வந்து சட்டவிரோதமான முறையில் காணியினை அபகரித்து வீடுகள் அமைத்து வருகின்றனர். இதற்கு இப்பகுதியிலுள்ள சிலர் முகவர்களாகச் செயற்பட்டு வருகின்றனர்.
அவர்களிடம் 20ஆயிரம் ரூபா அறவிட்டு அவர்களுக்கு அப்பகுதியில் காணி பிடித்துக் கொடுத்து வருகின்றார்கள் என்று எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளனர்.
எனவே இப்பகுதியில் முன்பு குடியேறிய குடும்பங்களைத் தவிர வேறு எவரும் புதிதாக காணி அபகரித்து சட்டவிரோதமாக குடியேறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்தார்.