பன்னங்கண்டி மக்களின் போராட்டம் தீர்வின்றி 30ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி 30ஆவது நாளாக இன்றும் (20.04.2017) தொடர்கிறது.

மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து சுமார் 27 வருடங்களாக பன்னங்கண்டி பகுதியில் வாழ்ந்து வரும் மக்களே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பன்னங்கண்டி சிவா பசுபதி கிராம மக்களுக்கு காணிகளை வழங்குவதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது தமக்கும் தீர்வு வேண்டுமென கோரி சரஸ்வதி கிராம மக்கள் மற்றும் ஜொனி குடியிருப்பு மக்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாம் வசித்து வரும் காணியின் பெறுமதியை பெற்றுத் தருமாறும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வதிகளை ஏற்படுத்தி தருமாறும் இம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like