வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைக்கைதி உயிரிழப்பு

வவுனியா சிறையிலிருந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (19) வவுனியா சிறைச்சாலையின் சிறைக்கைதியாக யு. நிசாந்த் 45வயதுடைய நபர் நோய்வாய்ப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சையின் பலனின்றி இன்று (20)காலை உயிரிழ்ந்துள்ளதாகவும் உடற்கூற்றுப்பிரிசோதனை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலைப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

You might also like