“ஹன்சிகா உங்களுக்கு என்ன ஆச்சு..? ” ஒல்லியாகலாம் அதுக்குன்னு இப்படியா…? வெளிவந்த ஹன்சிகாவின் தற்போதைய புகைப்படங்கள் : வாயடைத்துப்போன ரசிகர்கள்

கடந்த பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும், காமெடி படங்களோ, கதையம்சம் கொண்ட படங்களோ, அல்லது சீரியசான படங்களோ அதில் குழந்தை நட்சத்திரங்களுக்கான கதாபாத்திரங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பல குழந்தை நட்சத்திரங்களோ பிரபலங்களின் வாரிசுகளாகவே இருந்தனர் என்பது யாராலும் மறுக்க முடியாது, ஆனால் ஒரு சிலர் திறமையினால் அறிமுகமாகி இருந்தாலும் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது என்பது சந்தேகம் தான்.

இப்படி ஹிந்தியில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல விருதுகளையும் பெற்று இன்று பல மொழிகளிலும் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோட்வானி.

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் முதல் திரைப்படத்திலேயே நடிகர் தனுஷுடன் நடித்தால்

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க இவருக்கு உறுதுணையாக இருந்தது. இப்படி அதான் பின்பு பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் சரிந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா கடந்த சில மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி எடுத்து தற்பொழுது பார்ப்பதற்கே மிகவும் ஒல்லியாக மாறிவிட்டார் அந்த வகையில் இவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படமும் ஒன்று கிடைத்துள்ளது.

ஆம் பார்ப்பதற்கு துளி கூட ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு சின்ன குஷ்பூ வா இப்படி மாறி விட்டார். என்று கிண்டல் செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ஹன்சிகாவை பார்த்தீர்களா என்று கேட்டு வருகிறார்கள்.

You might also like