பாம்புகடிக்கு இலக்காகிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்

வவுனியாவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஐன்  ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன் நேற்றைய தினம் (19.04.2017) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்ததில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்.

தற்போதும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

You might also like