கிளிநொச்சியில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்பு

கிளிநொச்சி பளை பொலிஸாரால் 6 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து நேற்று (புதன்கிழமை) மேற்கொண்ட தேடுதலின்போது கஞ்சா போதைப்பொருளும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத் தேடுதல் நடவடிக்கையின் போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கேரள கஞ்சாவை பருத்தித்துறை பிரதேசத்திலிருந்து வடமராட்சி கிழக்கு பகுதிக்கு கொண்டுசென்று விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like