செல்பியால் பிறந்த நாளில் உயிரை விட்ட 11 வயது மாணவி..

சக தோழிகளுடன் கடற்கரையில் நின்று செல்பி எடுத்­துக்­கொண்­டி­ருந்­த போது கடலலை இழுத்துச் சென்றதில், நீரில் மூழ்கி 11 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது மாத்­த­றை­ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது உயிரிழந்தவர் நுகே­கொட, கங்­கொ­ட­வில பிர­தே­சத்­தைச் சேர்ந்த ருஸ்தி தரு­மினி ஜய­சிங்க என்ற 11 வயது மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் வீட்டிற்கு சென்ற குறித்த மாணவி, அங்குள்ள தனது 6 சக நண்பிகளுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு கடற்கரையில் உள்ள கடற்­பா­றை­யின் மீது நின்று செல்பி எடுத்­துள்­ள­னர். இதன் போது அங்கு திடீ­ரென வந்த பெரிய அலை இவர்களை இழுத்து சென்றுள்ளது.

இதன் போது அவருடன் சென்ற சக தோழிகள் 6 பேர் சிறு­கா­யங்­க­ளு­டன் தப்­பிக் கரை­சேர்ந்­த­போ­தும் குறித்த மாணவி நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­தார்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் உயிரிழந்த மாணவியின் பிறந்த தினம் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like