கிளிநொச்சி பளையில்பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி பளைப்பகுதியில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுத்தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்டநீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பளைப்பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டமை தொடர்பாக பளைப்பொலிசாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கடந்த 8ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த நபரை நிலையில் கடந்த 17ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 21ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் சந்தேகநபரை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபர் வசித்து வந்த நவீன வசதிகளைக்கொண்ட வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி பளைப்பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் கஞ்சாவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ம் திகதிவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருதங்கேணி பகுதியில் ஆறு கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன்,

குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 21ம் திகதி வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதியினை பளைப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோரியதையடுத்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 21ம்திகதி வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

You might also like