பிறந்த சிசுவை கொலை செய்து மண்ணில் புதைத்து விட்டு தப்பி ஓடிய பெண் கைது
மஹியங்கன, ஹசலாக்க பகுதியில் குழந்தை ஒன்றை பிரசவித்த உடன் கொலை செய்து, அக்குழந்தையை மண்ணில் புதைத்து விட்டு தப்பிச்சென்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹசலாக்க பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதுடைய பெண் ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவயருவதாவது,
குறித்த பெண் தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்து வீட்டிற்கு அருகில் புதைத்துள்ளார்.
பின்னர் அந்த கிராமத்தை விட்டே குறித்த பெண் தப்பிச்சென்றுள்ளார்.
இந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.