9 மாத கர்ப்பிணியின் உடலில் தீவைத்து எரித்த கணவனின் வெறிச்செயல்

ஹைதராபாத்தில் 9 மாத கர்ப்பிணியின் உடலில் மண்ணெய்ணெய் ஊற்றிய கணவனின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக்- சனா பேகம் ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்து முடிந்தது.

கூலி வேலை செய்து வந்த ஷேக், தனது மனைவியிடம் அவ்வப்போது வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியிடம் சம்பவம் நடைபெற்ற அன்று சண்டைபோட்டுள்ளார்.

அதில் தனது வீட்டில் இருந்த மண்ணெய்யை எடுத்து தனது மனைவியின் உடலில் ஊற்றி தீவைத்துள்ளார்.

இதில், துடிதுடித்த பேகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் பேகத்திற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பயங்கர தீக்காயத்தால் அவரது உடல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ளார்.

ஆனால் குழந்தை நலமாக உள்ளது என மருத்துவர் தெரிவித்துள்ளார். தற்போது ஷேக்கை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கினை பதிவு செய்துள்ளனர்.

You might also like