ஒன்றரை வயது ஆண் குழந்தையின் உயிருக்கு எமனாக மாறிய வாகனம்!

நிந்தவூர் பகுதியில் பேக்கரி உணவு பொருட்களை விற்பனை செய்து வரும் வாகனம் ஒன்றில் மோதுண்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளமை அந்தப்பகுதி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்திற்குள்ளான ஆண் குழந்தையை நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய் பேக்கரி வண்டியில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போது குழந்தை வண்டிக்கு முன் நின்று கொண்டிருந்ததை சாரதி அவதானிக்கவில்லை

சாரதி வாகனத்தை செலுத்திய போதே குழந்தை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like