பல கோடி ரூபா பெறுமதியான இடி தாங்கி கொள்ளை: இராணுவத்தினர் உட்பட 9 பேர் விளக்கமறியலில்

கொழும்பு – நாராஹென்பிட்டி சுத்தப்படுத்தும் நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கியை (மின்னல் கடத்தி) கொள்ளையிட்ட இராணுவத்தினர் உட்பட 9 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான இந்த இடி தாங்கியை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு இராணுவத்தினர், நான்கு வர்த்தகர்கள் உட்பட 9 பேரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ராக்சி இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 9 சந்தேக நபர்களில் 8 பேர் எதிர்வரும் 24 ஆம் திகதி அடையாளம் காணும் அணி வகுப்பில் நிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like