பெண்களுக்கு மட்டும் அரசாங்கம் வழங்கும் முக்கிய சலுகை!

இலங்கையில் உள்ள பெண்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முக்கிய விடையங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், தொழில் புரிகின்ற பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறையை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொழில் புரியும் பெண்களுக்கு கிடைக்கபெறும் மகப்பேற்று விடுமுறைகாலம் மிகவும் குறைவாக காணப்படுவதால் அவர்கள் தொழிலில் இருந்து விலகும் நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த மகப்பேற்று விடுமுறை காலத்தினை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதனடிப்படையில், அவர்கள் தொடர்ந்தும் பணி புரிவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக, பொது முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

You might also like