இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை கால்நடைகளின் தொல்லை அதிகரிப்பு : விவசாயிகள்

கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கால்நடைகளின் தொல்லைகளை எதிர்கொண்டிருப்பதன் காரணமாக, கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரணைமடுக்குளத்தின் கீழ் காலபோகம், சிறுபோகம் காலங்களில் கால்நடைகளின் தொல்லையே பெரும் பிரச்சனையாக உள்ளதாகவும் விவசாய அமைப்புகள் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு கடும் முயற்சிகளை எடுத்தாலும் கூட, கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் காணப்படுகின்ற கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இனங்காணப்படாததால், பயிர்ச் செய்கை நிலங்களை நோக்கியே கால்நடைகள் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இரணைமடுக்குளத்தின் கீழ் 800 ஏக்கரில் சிறுபோக முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், கால்நடைகளைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like