வவுனியாவில் இளைஞர் கழக சம்மேளன காரியாலயம் திறந்துவைப்பு

வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக்காரியாலயம் இன்று (21) காலை 9.45மணியளவில் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத் தலைவர் சு. காண்டீபன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், தர்மபால செனவிரத்தின, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் நகர சபை உபபிதா சந்திரகுலசிங்கம், இளைஞர் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகேசவன், மாவட்ட இளைஞர் சம்மேள மன்றத் செயலாளர் திரு. ஜ. சுவானி, இளைஞர் கழக உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

You might also like