வவுனியாவில் இலங்கை மின்சாரசபையின் வாகனம் மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்து : ஒருவர் காயம்

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் இன்று (21.04.2017) மதியம் 2.00மணியளவில் இலங்கை மின்சாரசபையின் வாகனம் மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி சிறுகாயங்களுள்ளாகினார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்த இலங்கை மின்சாரசபையின் வாகனம் சூசைப்பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து ஹோரவப்போத்தானை வீதிக்கு ஏறமுற்ப்ட்ட மோட்டார் சைக்கிலில் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி சிறுகாயங்களுக்குள்ளாகினார்.

 

You might also like