வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு அதிர்ச்சி காணொளி இனைப்பு:நால்வர் கைது!

புதுவருட தினத்தன்று வவுனியா, கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது. புதுவருட தினத்தன்று ஒரு குழுவினர் தமது வீட்டில் பாட்டு போட்டு வீட்டின் முன் ஆடிக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமோர் குழுவினர் அங்கு வந்து பாட்டு போட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களுடன் முரண்பட்டுக் கொண்டதுடன் வாள், கம்பிகள், பொல்லுகளால் அவர்கள் மீது தாக்கவும் முயற்சித்தனர். இதனையத்து குறித்த வீட்டில் இருந்த பெண்கள் அதனை சமரசம் செய்ய முயச்சித்தனர். இதன்போது அங்கு வந்த இளைஞர்கள் வீடு புகுந்து தாக்க முற்பட்ட போது இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய வவுனியா பொலிசார் வாள்வெட்டு, குழுமோதல் தொடர்பில் நான்கு பேரை நேற்று திங்கள் கிழமை (02.01) கைது செய்துள்ளதுடன் மேலும் மூவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

thank for video newsfirst

You might also like