வவுனியாவில் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கௌரவிப்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுச் செல்லும் எச். ஏ. ஏ. சரத்குமாரவிற்கு வவுனியா பொலிஸ் நிலைய வளாக கட்டிடத் தொகுதியில் இன்று (21.04.2017) பிற்பகல் 3.30மணியளவில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மன்னார், புளியங்குளம், கனகராஜன்குளம், நெடுங்கேணி, ஓமந்தை போன்ற பகுதிகளின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

You might also like