தைத்திருநாளை முன்னிட்டு கிளிநொச்சியில் வீதியோட்ட போட்டி

தமிழர்களின் பாரம்பரிய தினமான உழவர் திருநாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன் விருத்தி கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12.01.2017ஆம் திகதி வியாழக்கிழமை அன்று வீதியோட்ட போட்டி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.

12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் இயக்கச்சி சந்தியில் இருந்து ஆரம்பமாகி A-09 வீதிவழியாக கிளிநொச்சி கந்தசாமி கோவில் வரை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வீதியோட்ட போட்டி நிகழ்வில் பங்குபற்றி வெற்றியீட்டுபவர்களுக்கு பெறுதியான பரிசில்கள் வழங்கப்படுவதுடன், வீதியோட்ட நிகழ்வில் பங்கு பற்றி இலக்கினை அடையும் அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கப்பட உள்ளது என்றும் கிளிநொச்சி மாவட்ட இளையோர் திறன் விருத்தி கழகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வீதியோட்ட போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுக்கப்படுவதுடன், கீழ்வரும் தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பினை மேற்கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

1. பளைப் பிரதேச செயலகர் பிரிவு- ச.றஜிந்தன்-0766283748

2. கரைச்சி பிரதேச செயலகர் பிரிவு- வ.நிதர்சன்-0770855221

3. கண்டாவளை பிரதே செயலகர் பிரிவு – ந. சயந்தன்-0770823921

4. பூநகரி பிரதேச செயலகர் பிரிவு – கி. றாஜ்குமார்-0773581652

You might also like