முல்லைத்தீவில் நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்

நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொண்ட  நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு விசுவமடு, இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சோ்ந்த  அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி (வயது 32) என்பவரே இவ்வாறு திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் முன்னர், அவர் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில், தன்னை கைவிட்டுச் சென்ற கணவன் திரும்பி வரவில்லை எனவும் தனது  காணியை விற்று தான் பெற்ற கடன்களை செலுத்துமாறும், தனது இறுதி கிரிகைகள் முடிந்ததும் பிள்ளைகளை சிறுவா் விடுதியில் சோ்ததுவிடுமாறும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவனால்  கைவிடப்பட்டுள்ள குறித்த பெண்னுக்கு  பன்னிரண்டு, மூன்று வயதில் பெண் பிள்ளைகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில், புதுகுடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like