31ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 31ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சரஸ்வதி கமம் பகுதியில் 1990ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வரும் குடும்பங்கள் தமக்கான காணி உரிமங்களை வழங்கி வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்குமாறு கோரியே இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தனியார் காணி என்ற விடயம் என்பதால் இதற்கான தீர்வை வழங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், காணி உரிமையாளருடன் பேசி ஒரு சுமூகமான முடிவை பெற வேண்டியுள்ளது என்றும் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.