மரத்திலும் தூணிலும் கட்டிவைக்கப்பட்ட இரு பிள்ளைகள்! குடித்துவிட்டு கொடுமைப்படுத்திய தாய்

கதிர்காமம், நாககஹா வீதியில் யால வனவிலங்கு பூங்காவுக்கு அருகில் உள்ள பகுதி ஒன்றில் ஐந்து வருடங்களாக மரம் ஒன்றிலும் கொங்கீரீட் தூண் ஒன்றிலும் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

உருகுணை பிரதான நீதிமன்ற சங்க நாயக்கர் கப்புகம சரணதிஸ்ஸ தேரருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், கதிர்காமம் பொலிஸாருடன் பிரதேசத்திற்கு சென்று இந்த பிள்ளைகளை மீட்டுள்ளனர்.

இதன்போது 9 வயதான சிறுவன் கொங்கீரீட் தூணிலும், 17 வயதான யுவதி மரம் ஒன்றிலும் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இந்த பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். தாய் அங்கவீனமான மற்றுமொரு பிள்ளையுடன் கதிர்காமத்தில் பிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

பல வருடங்களாக இந்த தாய், பிள்ளைகள் இருவரையும் இவ்வாறு கட்டி வைத்து விட்டு, மற்றைய பிள்ளையுடன் பிச்சை எடுத்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தினமும் மது அருந்தி விட்டு வரும் தாய் பிள்ளைகளை அடித்து துன்புறுத்துவதாகவும் பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய தாய் மற்றும் மூன்று பிள்ளைகளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

You might also like