கிளிநொச்சியில் முறையற்ற விதத்தில் நெற்பயிற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரச சலுகைகள் ரத்து

முறையற்ற விதத்தில் கிணற்று அல்லது குளத்து நீரை பயன்படுத்தி நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோருக்கு அரசினால் வழங்கப்படும் அரச சலுகைகள் ரத்து செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட விவசாய குழு மற்றும் இரணைமடு சிறுபோக பயிற்செய்கை கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், முறையற்ற விதத்தில் கிணற்று நீரையோ அல்லது குளத்து நீரையோ பயன்படுத்தி நெற்பயிற் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் அரச சலுகைகள் ரத்து செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

இதேவேளை இந்த கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் சத்திய சீலன் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன் திணைக்களங்களின் அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

You might also like