உருத்திரபுரம் கிழக்கு கால்வாய் புனரமைப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உருத்திரபுரம் கிழக்கு கால்வாய் புனரமைக்கப்படும் பணிகளை கிராம மக்களோடு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று உருத்திரபுரம் கிழக்கு (D8) கால்வாய் புனரமைப்பு பணிகளையே அவர் இன்று பார்வையிட்டுள்ளார்.

அதன்பின்னர் அங்குள்ள மக்களுடன் சந்திப்பும் இடம்பெற்றது.

இதன்போது கால்வாய்களை துரிதமாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கு தமது நன்றிகளையும், அதே போன்று அறுபது ஆண்டுகளாக புனரமைக்கப்படாது மக்களால் பயன்படுத்தப்படும் வீதிகளையும் புனரமைத்து தருமாறும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை கடந்த அரசோடு சேர்ந்து இயங்கியவர்களால் இந்த வீதிகள் புனரமைப்பு செய்யப்படுவதற்கு தேங்காய்கள் உடைத்து ஆரம்பிக்கப்பட்ட வீதி பின்னர், ரி.என்.ஏ கட்சி வீதிகள் எனக்கூறி புனரமைப்பு செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.

இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடி வீதிகளை புனரமைப்பு செய்ய துரித நடவடிக்கை எடுப்பதாகவும், கட்சிகள் எனப்பாராது எமது மக்களுக்கு அனைவரும் சேவை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினருடன் உருத்திரபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like