தண்டவாளத்தில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்

மாத்தறை பொலிஸ் பிரிவின் வல்கம பிரதேசத்தில் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் வல்கம உதார மாவத்தைக்கு அருகில் உள்ள தொடருந்து பாதையில் நேற்று நடந்துள்ளது. மாத்தறையில் இருந்து காலி நோக்கி சென்ற தொடருந்தில் இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மஹாஹேன பானகல, மொவக்க பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான மனதுங்ககே நுவன் சம்பத் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like