வவுனியாவில் பொலிஸாரை மதிக்காமல் சென்ற மோட்டார் சைக்கில் :இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்

வவுனியா ஹொரவப்போத்தானை வீதியில் போக்குவரத்து பொலிஸாரை மதிக்காமல் சென்ற இளைஞன் மீது இன்று ( 21.04.2017) 10.30மணியளவில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.

வவுனியாவிலிருந்து கோவிற்குளம் நோக்கி மோட்டார் சைக்கிலில் இருவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை ஹோரவப்போத்தானை வீதி றோயல் ஹோட்டலுக்கு அருகே நின்ற போக்குவரத்து பொலிஸார் இவர்களை மறித்துள்ளனர். எனினும் பொலிஸாரை மதிக்காமல் அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை மோட்டார் சைக்கிலில் பின் தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார் அருந்ததி விடுதிக்கு அருகே இவர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிலில் பின்பகுதியில் இருந்தவரை தாக்கியுள்ளார். இதனால் பயமுற்ற மோட்டார் சைக்கிலின் சாரதி தப்பியோடியுள்ளதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவ்விடத்தில் சற்று பதட்டம் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like