கிளிநொச்சி மகா வித்தியாலய காணி ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படும்

இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய  காணி, எதிர்வரும்  8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் இரண்டாயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 990க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பாடசாலைக்குச் சொந்தமான காணியாக காணப்படும் காணி, கடந்த 2009ஆம் ஆண்டுக்குப்பின்னர் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த காணியினை விடுவித்து தருமாறு முன்னைய அரசிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like