முழு கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்திய யுவதியின் மரணம்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

17 வயதான அ.மேரி செறின் என்ற யுவதி கடந்த 19 ஆம் திகதி இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

குறித்த யுவதியின் பிரிவால் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் பிறந்த தினம் இன்றாகும்.

 

You might also like