விவாகரத்து வழக்கில் நீதிபதியை குழப்பமடையச் செய்த இரு மனைவிகள்

தான் திருமணம் செய்த கணவர் வேறு பெண்ணுடன் சென்றமையின் காரணமாக முதலாவது மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கில் ஆச்சரியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான நபரின் முதலாவது திருமணத்தின் போது அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவதாக இந்த நபரினால் வேறு பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொணடுள்ளதுடன், அவருடன் வேறு பிரதேசத்திற்கு அவர் சென்றுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த நிலைமைக்கமைய முதலாவது மனைவியினால் கல்கமுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்யும் போது மாதாந்தம் பராமரிப்பு பணம் கோரப்பட்டுள்ள நிலையில், அந்த பராமரிப்பு பணம் 4 வருடங்களாக செலுத்தாமையினால் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களாக எவ்வித பணமும் குறித்த பெண்ணிற்கு செலுத்தாமையினால் 480000 ரூபாய் பணம் அந்த பெண் பெற்றுக் கொள்ளவிருந்த நிலையில் அந்த பணத்தில் 4 லட்சம் பணத்தை பெண்ணிற்கு செல்லுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் முதலாவது மனைவியினால் இந்த நபரின் இரண்டாவது மனைவியை அழைத்து, குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்துவதற்கு தனக்கு அவசியமில்லை எனவும், குறித்த பணத்தை வட்டிக்காவது தேடி நீதிமன்றத்தினுள் வழங்கி வழக்கினை நிறைவு செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பணத்தை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து மீண்டும் தான் வழங்கி விடுவதாக முதலாவது மனைவி இரண்டாவது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

கல்கமுவ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வட்டிக்கு பெற்றுக் கொண்ட 4 லட்சம் பணத்தை முதலாவது மனைவியிடம் சந்தேக நபரினால் வழங்கப்பட்டுள்ளது.

அங்கு பணம் பெற்றுக் கொண்ட முதலாவது மனைவி நீதிமன்றத்திற்கு வெளியே வந்த சந்தர்ப்பத்தில் இரண்டாவது மனைவியிடம் அந்த பணத்தை மீளவும் வழங்கியுள்ளதுடன், தனது கணவருக்கு வளர்ந்திருந்த தாடி மற்றும் முடியை வெட்டிவிட்டு இரண்டாவது மனைவி மற்றும் பிள்ளைகளை ஹோட்டலுக்கு அழைத்து சென்று பகல் உணவு வழங்கியுள்ளார்.

பின்னர் அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு தரப்பினரதும் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like