வவுனியாவில் கருத்தாடல் தமிழ் மக்களின் அடுத்த கட்டம் என்ன?

வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (22) காலை 10.30மணியளவில் மன்னார் பொது அமைப்பக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிவகரன் தலைமையில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகினிறார்களா தமிழ் மக்கள் அடுத்தது என்ன? என்தலைப்பில் இடம்பெற்ற கருத்ததாய்வு நிலை கருத்துப்பகிர்வுறவாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தாத்தன்​,​ வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராசா​,​ வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்​, அனந்தி, மன்னார் மறை மாவட்ட ஆயர் கிங்லிசுவாம்பிள்ளை,​ முன்னாள் நாடாளுமன்ற

உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன்,வினோதரலிங்கம்,சமயத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,வர்த்தக சங்கத் தலைவர் திரு.இராஜலிங்கம், கிழக்கு மாகாண பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள்,அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்,சமூக அர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கருத்துப்பகிர்வுகளை முன்வைத்ததுடன் கருத்தாடல்களும் கலந்து கொண்டவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

 

You might also like