வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : பெண் உட்பட இருவர் படுகாயம்

வவுனியா கண்டி வீதியில் இன்று (22.04.2017) மதியம் 12.10மணியளவில் நடைபெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இலங்கை போக்குவரத்து சபையின் சாலைக்கு முன்பாக வீதியின் மறுபக்கம் மாற முற்ப்பட்ட முதியவர் மீது  கண்டி வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலை செலுத்திய பெண் மற்றும் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like