தடுமாறும் தமிழ் தலைமைகளால் தளர்வடைகின்றனரா தமிழர்கள்?: நிகழ்வை புறக்கணித்த கூட்டமைப்பினர்

தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன?’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இடம்பெற்ற கருத்துப் பகிர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சிலர் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசியவாதத்தை நிலைநிறுத்த வேண்டிய தார்மிக கடமையில் இருந்து தலைமைகள் நிலை தவறுவதாக எழும் வாதத்தை அடிப்படையாகக்கொண்டு மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பங்குபற்றுவதற்கு அரசியல் தலைமைகள், மதக்குருக்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டமைப்பின் சில தலைவர்கள் இதனை புறக்கணித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வட. மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே. சிவாஜிலிங்கம், எம்.தியாகராசா, முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புசெயலாளர் வணபிதா கலாநிதி எஸ்.சந்திரகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like