கிளிநொச்சியில் வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும் ,உயிரிழை நிறுவனமும் இணைந்து வட மாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இவ் வருடம் யூலை மாத இறுதியில் கிளிநொச்சியில் நடைபெற உள்ளது.

இது தொடர்பான ஆயத்தக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் மாவட்ட அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில்  21.04.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் சமூக சேவைகள் அலுவலர்கள்,அபிவிருத்தி அலுவலர்கள்  மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக இயங்கும் நிறுவனங்கள், முதியோர் சங்கங்கள், கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்திலன் உட்படுத்தல் கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்ற வருடம் வவுனியாவில் தமிழ் மாற்றுத் திறனாளிகளுக்கான மாகாண விளையாட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
You might also like