கனகராயன்குளத்தில் பாடசாலை மாணவன் குளத்தில் மூழ்கி மரணம்

கனகராயன்குளம் குறிசுட்டகுளம் படுகாட்டுக்குளத்தில் குளிக்க சென்ற 10வயது சிறுவன் நேற்று ( 21.04.2017) காலை 13.30மணியளவில் குளத்தில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புலமைப்பரிட்சை வகுப்புக்கு சென்று விட்டு கனகராயன்குளம் படுகாட்டுக்குளத்தில் அமைந்துள்ள குளத்திற்கு அருகே காணப்படும் ஆலயத்திற்கு சென்ற மூன்று சிறுவர்கள் ஆலய வழிபாடுகளை முடித்து விட்டு ஆலயத்திற்கு அருகே காணப்படும் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

இதன்போது 10வயதுடைய பாலச்சந்திரன் கவிப்பிரியன் என்ற சிறுவன் குளத்தில் அருகே காணப்பட்ட குழியில் வீழ்ந்துள்ளார். உடனே அவருடன் சென்ற இரு சிறுவர்களும் அயலவரை அழைத்து வர சென்றுள்ளனர். அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குழியில் வீழ்ந்த சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 1மணித்தியாலமாக போராடி சிறுவனை மீட்டேடுத்து அருகே காணப்படும் புளியங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
தற்போது குறித்த சிறுவனின் சடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரின் தயார் தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவில் வீட்டுபணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

You might also like