காணாமல் போன கணவரைத் தேடி மந்திரவாதியிடம் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட பயாகல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதாக கூறி குறித்த மந்திரவாதி இளம் பெண்ணை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

22 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடியுள்ளார்.

இதில் காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதற்கு 15,000 ரூபாய் செலவாகும் என்று குறித்த மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த பெண்ணை தனியறைக்குள் அழைத்துச் சென்ற மந்திரவாதி போதை தரும் எண்ணெய் ஒன்றை பெண்ணின் உடலில் பூசி அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

எனினும், பாதுகாப்பாக தப்பி வந்த யுவதி பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளார்.

பெண்ணின் முறைப்பாட்டையடுத்து பயாகல பொலிஸார் மந்திரவாதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like