கைக்குழந்தையை கொலை செய்யச் சொன்ன மந்திர சக்தி: தாய் செய்த அதிர்ச்சி செயல்
ராஜஸ்தானில் மந்திரசக்தி கொலை செய்யச் சொன்னதாக கூறி 4 மாத குழந்தையை தாய் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப் நகரில் உள்ள வீடு ஒன்றின் நீர்த்தொட்டியில், நான்கு மாத குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை உடனடியாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது குழந்தையின் தாய் தான் அக்குழந்தையை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில் குழந்தையின் தாய் பிங்கி கூறுகையில், குழந்தையை நீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததது நான் தான் எனவும், சில மந்திர சக்தி வந்து தன் மகளை கொல்லச் சொன்னதால் இந்த செயலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது மகளின் மரணம், தனது கணவர் மற்றும் 4 வயது மகனுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.