சற்று முன் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் பலி

கிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் சற்று முன் உழவு இயந்திரத்துடன் மோட்டர் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் மோட்டர் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலையே பலியாகி உள்ளார்.

இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் உள்ள வாகன திருத்தகத்தில் இருந்து திருவையாறு நோக்கி செல்ல முற்பட்ட உழவு இயந்திரத்துடன் திருயையாறு பக்கத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளும் மோதுண்டதிலையே மோட்டர் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலையே பலியாகியுள்ளார்.

விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்தில் உயிர் இழந்தவரது சடலம் கிளிநொச்சி போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தில் பலியான நபர் யார் என்பது குறித்து இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

You might also like