யாழ்.சிறைச்சாலையில் உள்ள கைதிக்கு உணவு பொதிக்குள் மறைத்து போதைப்பொருள் கைமாற்றம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிக்கு உணவு பொதிக்குள் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருள் கைமாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதுடன் போதைப்பொருள் கொண்டுசென்ற நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டு கடந்த 2 வருடங்களாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அவரின் சகோதரன் ஒருவர் இவ்வாறு ஹெரோயின் போதைப் பொருளினை கைமாற்ற முயன்றுள்ளார்.

கைதியை பார்ப்பதற்காக சென்ற வேளையில் உறவினர்கள் கொண்டு வரும் உணவுகளை பரிசோதனை செய்வது வழக்கம்.

அவ்வாறு குறித்த நபர் கொண்டு வந்த உணவு பொதியை பிரதான சிறைச்சாலை பரிசோதக அதிகாரி ஒருவர் பார்வையிட்டுள்ளார்.

அப்போது குறித்த பொருள் இருப்பதை அவதானிக்கவில்லை. இருந்தும் இரண்டாவது தடவை பரிசோதனை செய்த போதே, 3 சிறுபொதிகளாக சுமார் 3 கிராம் நிறையுடைய ஹெரோயின் பொதிகள் உணவு பொதிக்குள் இருந்துள்ளன.

இதேவேளை, உணவு பொதியை சிறைச்சாலைக்குள் கொண்டுவந்த நபர் இதுவரையில் கைதுசெய்யப்பட வில்லை எனவும் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like