63 ஆவது நாளாக தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 63 ஆவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like