விடுதியில் வேலை செய்த 16 வயது சிறுமி மரணம்!

அளுத்கம பகுதியில் உள்ள விடுதியில் தொழில் புரிந்த 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை திடீர் மரண விசாரணை நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.

குறித்த விடுதியில் உள்ள மின் உயர்த்தியில் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது அதிலிருந்த கம்பி ஒன்று அந்த விடுதியில் தொழில் புரிந்த சிறுமியின் கழுத்தில் விழுந்துள்ளது.

கரவல்ல வெலிப்பன பகுதியைச் சேர்ந்த ஜேசுதாஸன் சந்தனி என்ற சிறுமியே கடந்த 09ஆம் திகதி இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலையின் பின்பகுதி மற்றும் முதுகெலும்பில் ஏற்பட்ட காயங்களால் அதிக இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சந்தனி உயிரழந்துள்ளார் என பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட கொழும்பு வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கே.கே.ஜோசரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு அடுத்த மாதம் 04ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன் போது விடுதியின் உரிமையாளரை திடீர் மரண விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வெலிப்பன பொலிஸாருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

You might also like