காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்திற்கு ஆதரவாக 27ம் திகதி பூரண ஹர்த்தால்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினர் இன்று திருகோணமலையில் கூடி கலந்துரையாடினர்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கடந்த மாதத்தில் இருந்து நில மீட்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந் நிலையில், அந்த மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினரும் தமது ஆதரவினை தெரிவிப்பதாக தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கும், நிலமீட்பு போராட்டம் தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் நில மீட்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவினையும் அளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

You might also like