இலங்கை கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள்! உலக நாடுகள் பலத்த போட்டி

இலங்கையின் கடல் எல்லையில் ஜப்பானின் தலையீடுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்ட ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், ஜப்பான் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளில் பெரும்பாலானவை, இலங்கை கடற்கரைக்கு அருகில் மேற்கொள்ளும் செயற்பாடே இதற்கு காரணமாகும்.

இதேவேளை, ஜப்பான் அரசாங்கத்தினால் கப்பல்கள் வழங்கப்படுவது, திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பித்தல், இலங்கை கடலுக்கு அருகில் கனிம வளங்களை தேடி பார்ப்பதற்காக கூட்டு கடல் ஆய்வு மேற்கொள்ளுதல், கடல்சார் கட்டுமானங்களுக்கு நிதி வழங்குதல் ஆகிய செயற்பாடுகளாகும்.

இலங்கை கடல் எல்லையை சுற்றி 65.5 அடி ஆழமான கடற்கரை மற்றும் இலங்கை கடலிலுள்ள வணிக பெறுமதியான பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக உலகின் பலமான நாடுகள், இலங்கையின் கடல் எல்லை மீது அதிக அக்கறை செலுத்துவதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கடல் எல்லையில் ஜப்பானின் தலையீடுகள் அதிகரிக்கவுள்ளன. இந்நிலையில் உலகின் பலமான நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் தலையீடுகளும் இலங்கை கடல் எல்லையில் அதிகரிக்கவுள்ளது.

அதன் ஊடாக ஒவ்வொரு நாடுகளில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார போட்டி நிலைக்கு ஏற்ப, இலங்கையின் கடல் எல்லை முழுமையாக திறக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட கூடும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like