வவுனியாவில் மாற்றுத்திறனாளியால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் இன்று 24.04.2017 காலை 9.30மணியளவில் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்  ஏஸ். ஏஸ். ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த ஸ்ரீதரன் பிரியதர்சினி குடும்பத்தினர் சமூக சேவைகள் செய்வதில்மற்றவர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக விளங்குகின்றார்கள். ஜெவனிக்க என்ற மாற்று திறனாளியான பிள்ளையை எடுத்து வளர்த்து வரும் இவர்கள் இன்று பிறரிடம் உதவி பெற்று உதவி வேண்டி நிற்பவர்களுக்கு உதவி வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் இன்று கோவில்புளியஙகுளம் முத்தமிழ் வித்தியலாய மாணவியான சிவசாளினி சுரேஸ்குமார் என்பவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி உதவியுள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட காலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வ. பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், பாசாலை அதிபர்களான ந. சிவலிங்கம், மு. ஜெயசீலன். தொழிநுட்ப உதத்தியோகத்தர் சோதிநாதன், மாணிக்கம் ஜெகன், சிறுவர்கள் உரிமை நலன்பேணும் உத்தியோகத்தர் செல்வகுமார், மற்றும் பொதுமக்கள். பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இறுதியில் தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்களினால் உதவி வழங்கியவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

You might also like